உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துாய்மை பணியாளர்கள் எங்கே நகராட்சி கூட்டத்தில் விவாதம் 

துாய்மை பணியாளர்கள் எங்கே நகராட்சி கூட்டத்தில் விவாதம் 

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் குப்பையை சேகரிக்க, நகராட்சி, தனியார் துாய்மை பணியாளர்கள் பணிபுரிகிறார்களா என்பதே தெரியவில்லை என கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.சிவகங்கை நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கார்கண்ணன், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்

ஜெயகாந்தன் (தி.மு.க.,): நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பொறியாளர் பங்கேற்காதது குறித்து விளக்கம் கேட்க வேண்டும்.தலைவர் : அவரை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.விஜயகுமார் (காங்.,) : மானாமதுரை ரோட்டில் உள்ள நகராட்சி மின் மயானம் உரிய பராமரிப்பின்றி உள்ளது. ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்.எம்.,ராஜா (அ.தி.மு.க.,): மழைக்காலத்தில் சிவன் கோயில் பின்புறம், புத்தர் தெருவில் மழை நீருடன், சாக்கடை கழிவுநீர் தேங்குவதை தவிர்க்க சிறிய பாலம் கட்ட வேண்டும்.அயூப்கான் (தி.மு.க.,): சிவகங்கை அரண்மனைவாசல் முன் நேதாஜி சிலையை சுற்றி சேதமடைந்துள்ள கட்டடத்தை சீரமைத்து, அங்கு செயற்கை நீரூற்று ஏற்படுத்த வேண்டும்.எம்.காந்தி (தி.மு.க.,): சாஸ்திரி தெருவில் பாதாள சாக்கடையில் கழிவு நீர் செல்லாததால், துார்நாற்றம் வீசுகிறது.அன்பு மணி (அ.ம.மு.க.,): சிவகங்கையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை சேகரிப்பதே இல்லை. இங்கு நகராட்சி, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றார்களா, இல்லையா.தலைவர்: வார்டு வாரியாக துாய்மை பணியாளர்களை வைத்து கூட்டு துாய்மை பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை