உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெரியகோட்டை அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

பெரியகோட்டை அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

மானாமதுரை; பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர்பொற்கொடி ஆய்வு செய்தார்.இப்பள்ளியில் உள்ள கட்டடங்கள் மிகவும் சேதமடைந்து அவ்வப்போது மேற்கூரை பூச்சு உதிர்ந்து வந்தன. மேலும் கட்டடங்களில் உள்ள சிலாப் இடிந்து விழுந்தன. மாணவர்கள் பள்ளிக்கு வர அச்சத்தில் இருந்ததை தொடர்ந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கோவிந்தன், மானாமதுரை முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துச்சாமி, பெரிய கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன், அறங்காவலர்குழுத் தலைவர் ஜெயமூர்த்தி, பெரியகோட்டை கிராம முக்கியஸ்தர்கள் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் பொற்கொடி ஆகியோரை சந்தித்து பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.இதனை தொடர்ந்து நேற்று பள்ளிக்கு வந்த மாவட்ட கலெக்டர் பொற்கொடி பள்ளி வளாகம் மற்றும் அங்குள்ளமாணவர்கள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்து உடனடியாக தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை