மேலும் செய்திகள்
கபடி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
20-Sep-2026
கபடி அணி வெற்றி
22-Sep-2026
திருப்புத்துார்: திருப்புத்துாரில் அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது. திருப்புத்துார் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அணி வீரர்கள் தேர்விற்கான போட்டிகள் நடந்தன. 14, 17 வயதிற்குட்பட்ட ஆண்,பெண் இருபாலருக்கான மாவட்ட அணி தேர்வு நடந்தது. அதில் பங்கேற்க வந்த வீரர், வீராங்கனைகள் பல அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையே போட்டிகள் நடந்தன. அமெச்சூர் கபடிக்கழகத் தலைவர் ஏ.வி.நாகராஜன், துணைத் தலைவர் மெ.காளிமுத்து, கபடி பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அணித் தேர்வை நடத்தினர். தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் வேலூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான மாவட்டங்களுக்கிடையேயான கபடிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
20-Sep-2026
22-Sep-2026