உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளிக்கு புதிய இடம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

அரசு பள்ளிக்கு புதிய இடம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

மானாமதுரை: மானாமதுரை அரசு பெண்கள் பள்ளி இடப்பற்றாக் குறையால் தவித்து வரும் நிலையில் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் பெண்கள் பள்ளி அமைக்க நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். மானாமதுரையைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் பலரும் 10ம் வகுப்பிற்கு மேல் படிக்க மானாமதுரை தான் வந்து செல்கின்றனர். 1961ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெண்கள் பள்ளி தற்போது ஒரு ஏக்கர் 24 சென்ட் பரப்பளவில் ஆறு கட்டட தொகுதிகளுடன் ஆயிரத்து 915 மாணவிகளுடன் இயங்கி வருகிறது. தலைமையாசிரியை உட்பட 60 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.இரண்டாயிரம் மாணவிகள் கல்வி பயிலும் இப்பள்ளியில் விளையாட்டு மைதானமும் கிடையாது. மேலும் குறுகிய இடமாக இருப்பதால் வகுப்பறைகள் நெருக்கம் நெருக்கமாக அமைந்துள்ளது.இடவசதி இல்லாததால் மாணவிகளின் சைக்கிள்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன.இட நெருக்கடி காரணமாக கழிப்பறை வசதியும் செய்து தர முடியவில்லை. எனவே பெண்கள் பள்ளிக்கு கூடுதல் கட்டட வசதி செய்து தர வேண்டும், கூடுதல் இடம் ஒதுக்கி தர வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் தாலுகா அலுவலகம் எதிரே மழைமானி அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்தனர். சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்துடன் அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கிய உடன் கட்டுமான பணிகள் தொடங்கும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி