உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்ட சிலம்ப போட்டி பள்ளி மாணவிகள் சாதனை

மாவட்ட சிலம்ப போட்டி பள்ளி மாணவிகள் சாதனை

திருப்புத்தூர்: மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் திருப்புத்துார் மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். சிவகங்கையில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் திருப்புத்தூர் ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளியின் நான்கு மாணவியர் விளையாடி வெற்றி பெற்றனர். இரட்டைக் கம்பு பிரிவில் முதலிடம் என்.எம்., மகளிர் பள்ளி மாணவி ப்ரீத்தி வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். தொடு வரிசை போட்டியில் 2ம் இடத்தை அதே பள்ளி மாணவி சர்விகா, 3 ம் இடத்தை நித்யஹர்ஷினி, ஜெயதாரணி ஆகியோற் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பயிற்சியாளர்கள், பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை