தீபாவளி சிறப்பு பூஜை
தேவகோட்டை: தீபாவளியை முன்னிட்டு தேவகோட்டை பகுதி கோயில்களில் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. - இங்குள்ள சிலம்பணி சிதம்பர விநாயகர், கலங்காது கண்ட விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நித்திய கல்யாணி கைலாச நாதர், சவுபாக்ய துர் கையம்மன், கோதண்டராமஸ்வாமி, ரங்கநாத பெருமாள், புவனேஸ்வரிஅம்மன், காமாட்சியம்மன், திருமணவயல் தியான பீட மகா கணபதி ஆகிய கோயில்களில் சுவாமி களுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் புத்தாடை அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். * திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடந்தது. தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சக்கரத்தாழ்வார், நரசிம்மர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர், உற்ஸவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு அபிஷேகம் நடந்தது.