தி.மு.க., செயற்குழு கூட்டம்
சிவகங்கை: சிவகங்கையில் தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தீர்மானத்தை விளக்கிப் பேசினார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது. தி.மு.க.,அரசின் நான்கரை ஆண்டு கால சாதனைகளை விளக்கி மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எம்.எல்.ஏ., தமிழரசி, நகராட்சி தலைவர் துரைஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மதியரசன், மாரியப்பன்கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், மந்தக்காளை, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.