உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.மு.க., செயற்குழு கூட்டம்

தி.மு.க., செயற்குழு கூட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரான அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். நவ.,14,15ல் சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் வரும் துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., தமிழரசி, மாவட்ட துணைச் செயலாளர் ஜோன்ஸ்ரூசோ, முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், மானாமதுரை சேர்மன் மாரியப்பன் கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், கென்னடி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சேர்மன் துரை ஆனந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ