மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
13 hour(s) ago
பயிற்சி முகாம்
13 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
13 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
13 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
13 hour(s) ago
சிவகங்கை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தி.மு.க., இளைஞரணி செயலரும் அமைச்சருமான உதயநிதி இரு நாட்கள் சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று முன்தினம் மாலை மதுரையிலிருந்து சிவகங்கை வந்த உதயநிதி சிவகங்கை வடக்கு ஒன்றியம் பெருமாள்பட்டியில் கொடியேற்றினார். தொடர்ந்து சிங்கம்புணரி ஒன்றியம் அரளிக்கோட்டையிலும் கட்சி கொடி ஏற்றினார். எஸ்.எஸ். தென்னரசு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.நேற்று திருப்புத்துார் அருகே வைரவன்பட்டியில் சிவகங்கை மாவட்ட 4 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த 1500 மூத்த நிர்வாகிகளுக்கு தங்க முலாம் பூசிய மெடல், நிதி உதவி, வேட்டி வழங்கினார். தொடர்ந்து தி.மு.க., நிர்வாகிகள் முன்னிலையில் லோக்சபா தேர்தல் பணி குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் கார்கண்ணன், அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், சிங்கம்புணரி முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைராசன், ஜெயங்கொண்டநிலை மணிமாறன், ராஜபாண்டியன், ரகு பாண்டியன், ரமேஷ் பாண்டியன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் திருநாவுக்கரசு, சிவகங்கை மாவட்ட தி.மு.க., துணைச்செயலாளர் ஜோன்ஸ்ரூேஸா, நடிகர் நிஷாந்த் ரூசோ கலந்து கொண்டனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago