மேலும் செய்திகள்
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்
27-Jun-2025
இளையான்குடி: இளையான்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி மற்றும் நகர இளைஞரணி சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரும்பச்சேரி, புதுார் கிராமங்களில் நடைபெற்றது. ஒன்றிய,நகர அமைப்பாளர்கள் மலைச்சாமி,அனுஷ்கா தலைமை தாங்கினர். மாவட்டத் துணை அமைப்பாளர் பொற்கோ, ஒன்றிய,நகர துணை அமைப்பாளர்கள் இப்ராஹிம்ஷா, மணி,நாகராஜன்,துரைமுருகன்,கண்ணன் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தமிழ்பிரியா, பேச்சாளர் சந்தியா, ஒன்றிய செயலாளர் செயலாளர் மதியரசன் நகர செயலாளர் நஜூமுதீன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன்,பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம் பேசினர்.கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
27-Jun-2025