மேலும் செய்திகள்
மாண்டியா கொக்கரேபெல்லுார் பறவைகள் சரணாலயம்
28-Aug-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே வேட்டங்குடி சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாய்க்கு வந்த பறவைகள் கூடு கட்டாமல் மழைக்காக காத்திருக்கின்றன. இந்த பறவைகள் சரணாலயத்தில் மழை காலத்தில் பெரும்பாலும் ஆக. இறுதி, அல்லது செப். துவக்கத்தில் 'வலசை போதல்' ஆக வந்து இனவிருத்திக்காக இங்குள்ள மரங்களில் கூடு கட்டும். பறவை கூடு கட்டி தங்கினால் மழை தொடரும் என்ற அனுபவம் இக்கிராமத்தினருக்கு உண்டு. இந்நிலையில் ஆகஸ்ட் முதல் இரு முறை பறவைகள் வந்து மழை இல்லாமல் திரும்பி சென்று விட்டன. தற்போது மூன்றாவது முறையாக நத்தை கொத்தி நாரை சிறு கூட்டமாக வந்துள்ளன. மழைக்காக காத்திருக்கும் இப்பறவைகள் கூடு கட்டாமல் காத்திருக்கின்றன. தொடர் மழை இல்லாவிட்டால் இப்பறவைகள் அடுத்த மழை பெய்யும் பகுதிக்கு வலசை போய் விடும். விவசாயிகளை மட்டுமில்லாமல் பறவைகளுக்கும் தாமதமான மழை அதன் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்கிறது.
28-Aug-2025