உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் நாய்கள் தொல்லை

மானாமதுரையில் நாய்கள் தொல்லை

மானாமதுரை : மானாமதுரை மற்றும் விரிவாக்க பகுதிகளில் சில மாதங்களாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பலரும் நாய்க் கடிக்குள்ளாகி வருகின்றனர்.இவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை எடுத்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போது தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களை கொல்வதற்கு தடை உள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ