உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி

மானாமதுரையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி

மானாமதுரை: மானாமதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதியை நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்படுத்தியுள்ளனர்.மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் மற்றும் வீர அழகர் கோயில்களில் 1ம் தேதி முதல் சித்திரை திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் அழகர்இறங்கும் விழா வரும் 12ம் தேதி, நிலாச்சோறு நிகழ்ச்சி 13ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி,துணைத் தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மக்கள் கூடும் இடங்களில் குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி அமைத்துக் கொடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை