குடிநீர் இயந்திரம் மீண்டும் பழுது
தேவகோட்டை: தேவகோட்டை அரசு மருத்துவமனை அருகில் நகராட்சி சார்பில் தானியங்கி குடிநீர் இயந்திரம் வைக்கப்பட்டது. இயந்திரத்தில் காசு போட்டால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்தது. மருத்துவமனை க்கு வருபவர்களுக்கும், அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு தானியங்கி குடிநீர் இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சிறு சிறு பழுது வந்தாலும் உடனடியாக சரி செய்யப்பட்டது. கடந்த மாதம் இயந்திரத்தில் பெரிய பழுது ஏற்பட்டது. பல நாட்களாக பூட்டு போடப்பட்டது. தினமலர் இதழில் படத்துடன் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து மறு நாளே சரி செய்யப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்கப்பட்டது. இந் நிலையில் மீண்டும் கடந்த ஒரு வாரமாக தானியங்கி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் இயந்திரம் செயல்பட வில்லை. இதனால் அப்பகுதியினர் குடிநீருக்கு சிரமப் படுகின்றனர். நகராட்சியினர் விரைந்து தானியங்கி குடிநீர் இயந்திரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.