உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு

காரைக்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு

காரைக்குடி: காரைக்குடி வாஞ்சிநாதன் தெருவில் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். காரைக்குடி மாநகராட்சி 27வது வார்டுக்கு உட்பட்ட முத்துராமலிங்கத் தேவர் நகர் வாஞ்சிநாதன் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு மாநகராட்சி மூலம் வீடு தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என பொது மக்கள் புகார் கூறுகின்றனர். போதிய தண்ணீர் கிடைக்காமல் விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வாஞ்சிநாதன் தெருவில் குடிநீர் கிடைப்பதில் பிரச்னை இருந்தது. அப்பிரச்னை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி