உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாடக்கோட்டையில் குடிநீர் வினியோகம்

மாடக்கோட்டையில் குடிநீர் வினியோகம்

சாலைக்கிராமம்; இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வண்டல் ஊராட்சியை சேர்ந்த மாடக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையடுத்து கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடினர்.மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களும் பழுதடைந்ததால் இப்பகுதி மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.15 கொடுத்து வாங்கி வந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.இதனை தொடர்ந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட ஊழியர்கள் மாடக்கோட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்து நேற்று முன்தினம் முதல் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை