உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மானாமதுரை அருகே விளாக்குளத்தில் துாசிகளுடன் குடிநீர் வினியோகம்

 மானாமதுரை அருகே விளாக்குளத்தில் துாசிகளுடன் குடிநீர் வினியோகம்

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக் குளத்தில் தூசி,துரும்புகளுடன் குடிநீர் வினியோகம் செய்வதால் கிராம மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மேலப் பிடாவூர் ஊராட்சிக்குட்பட்ட ஏ விளாக்குளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊருக்கு மத்தியில் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இத்தொட்டி கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் ஆனதால் ஆங்காங்கே துருப்பிடித்து கீழே விழும் நிலையில் உள்ளதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தொட்டிக்கு அருகில் உள்ள மற்றொரு பழைய தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிற நிலையில் வீடுகளுக்கு வரும் குடிநீரில் அவ்வப்போது தூசி, துரும்புகளும் ஒரு சில நேரங்களில் புழு, பூச்சிகளும் வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ளவர் களுக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்ட நிலையில் இக்கிராமத்திற்கு வரும் செவிலியர் தண்ணீரினால் தான் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு வருவதாக கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மேலும் கிராமத்தினருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏ.விளாக்குளம் கிராமத்தில் சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை இடித்து அகற்றிவிட்டு புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி