உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டிரைவர் முகம் சிதைத்து கொலை

டிரைவர் முகம் சிதைத்து கொலை

இளையான்குடி : தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரையைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 28. கதிர் அடிக்கும் இயந்திர டிரைவர். ராமநாதபுரம் மாவட்டம், கீழத்துாவலைச் சேர்ந்தவர் நவீன், 19. இவர், அந்த இயந்திரத்தில் கிளீனராக உள்ளார். இருவரும் நேற்று முன்தினம், சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நெல் அறுவடை பணியை முடித்து விட்டு, இரவு வேலடிமடை பஸ் ஸ்டாப்பில் வண்டியிலேயே துாங்கினர்.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு டூ - வீலர்களில் வந்த மூன்று பேர், அரிவாளால் டிரைவரின் முகத்தை சிதைத்து கொலை செய்தனர். சத்தம் கேட்டு தடுத்த நவீனையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !