மேலும் செய்திகள்
ரத்ததானத்தை ஊக்குவிக்க 'உதிரம்' மாரத்தான் போட்டி
25-Nov-2024
சிவகங்கை : மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் சிவகங்கையில் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். போட்டியில் பள்ளி கல்லுாரி மாணவர்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 600 பேர் கலந்து கொண்டனர்.முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 14 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள், 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆண், பெண் பிரிவினருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம், சிறப்பு பரிசாக முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 பரிசுத்தொகை, பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், உதவி ஆணையர் கலால் ரெங்கநாதன், கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன், டி.எஸ்.பி., அமல அட்வின், கோட்ட கலால் அலுவலர் ரெத்தினவேல் பாண்டியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், தாசில்தார் சிவராமன் கலந்து கொண்டனர்.
25-Nov-2024