உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளாப்பூரில் உலர்களம் திறப்பு

காளாப்பூரில் உலர்களம் திறப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே உழவர் உற்பத்தியாளர் கம்பெனியில் கடப்பாக்கல்உலர் களம் திறக்கப்பட்டது. சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்புத்தூர் ஒன்றிய விவசாயிகள் 1000 பேர் ஒருங்கிணைந்து ஆவுடைய விநாயகர் கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவன நிலத்தில் சின்ஜெண்டா நிறுவனம் ஏற்பாட்டில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பு சார்பில் ரூ. 11 லட்சம் மதிப்பில் கடப்பா கற்களால் ஆன உலர்களம் அமைக்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் உலர் களத்தை திறந்து வைத்தார். விழாவில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையரக இணை இயக்குநர் அமுதன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தமிழ்ச்செல்வி, சின்ஜெண்டா இயக்குநர் வைத்தியநாதன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா துணை தலைவர் கண்ணன், உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் அழகர்சாமி, ஏற்றுமதி மேம்பாட்டு மைய தலைவர் ராஜமூர்த்தி, செல்வகுமார், வேளாண்மை அலுவலர்கள் கனிமொழி, புவனேஸ்வரி, உதவி வேளாண்மை அலுவலர் ரத்தினகாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ