உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆபத்தில் கல்வித்துறை அலுவலகம்

ஆபத்தில் கல்வித்துறை அலுவலகம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகளுக்கு தனித்தனியாக அலுவலக கட்டடம் செயல்பட்டு வருகிறது. 1982ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடங்கள் சிதிலமடைந்து வருகிறது. இதில் மாவட்ட கல்வித்துறை கட்டட பின் பகுதி முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இந்த கட்டடத்தில் தான் கல்வித்துறை அலுவலகங்கள், சுகாதாரம், புள்ளியியல், கால்நடை, வேளாண்மை துறை அலுவலகங்கள் செயல்படுகிறது.இந்த அலுவலகங்களில் 500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணிபுரிகின்றனர். இந்த கட்டடத்தின் சிமென்ட் பூச்சு அடிக்கடி பெயர்ந்து விழுகிறது.இதனால் இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள் அச்சத்துடன் பணிசெய்ய வேண்டியுள்ளது.பெரும் விபத்து ஏற்படும் முன் அரசு அலுவலகங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை