உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் விழுந்த மின் கம்பம் மின்கம்பங்களை பராமரிக்க கோரிக்கை

திருப்புத்துாரில் விழுந்த மின் கம்பம் மின்கம்பங்களை பராமரிக்க கோரிக்கை

திருப்புத்துார் : திருப்புத்துாரில் சமஸ்கான் பள்ளிவாசல் ரோட்டில் திடீரென்று மின்கம்பம் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்விநியோகம் பல மணி நேரம் தடைப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வாகனம்,ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. திருப்புத்துார் சமஸ்கான் பள்ளிவாசல் தெருவில் நேற்று காலை 10:00 மணி அளவில் சிமென்ட் கான்கிரீட் மின்கம்பம் உடைந்து சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை. அந்த ரோட்டில் போக்குவரத்து தடைப்பட்டது. தொடர்ந்து மின்விநியோகத்தை துண்டித்து விட்டு வேறு கம்பம் ஊன்றும் பணியை மின் துறையினர் துவக்கினர். 75 ஆண்டுகளுக்கு முன்பாக ஊன்றப்பட்ட இரும்பு மின்கம்பங்கள் பல இடங்களில் இன்றும் கம்பீரமாக உள்ளதை பார்க்க முடியும். அதன் பின்னர் வந்த கனமான சிமென்ட் கான்கிரீட் மின்கம்பங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. தற்போது ஊன்றப்படும் கனமில்லா மின் கம்பங்கள் வளைவதும், கான்கிரீட் உதிர்ந்து கம்பிகள் துருப்பிடிப்பதும், சேதமடைந்து மின் விநியோகம் பாதிக்கிறது. இதனால் மின் கம்பத்தை மாற்றும் பணி அதிகமாகிறது. வழக்கமான பணிகளைப் பார்க்கவே பணியாளர் பற்றாக்குறை நிலவும் போது இது கூடுதல் பணியாகி விடுகிறது. மின்துறையினர் மீண்டும் வலுவான மின்கம்பங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை