மேலும் செய்திகள்
போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
17-Jul-2025
சிவகங்கை: சிவகங்கையில் ஓய்வூதிய சட்ட திருத்தங்களை கைவிட கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சுப்புராம், விநாயகமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் கருணாநிதி, மண்டல செயலாளர் கோகுலவர்மன் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் உமாநாத் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்கியதை மின் வாரிய ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
17-Jul-2025