உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்ஜினியர் வெட்டிக்கொலை

இன்ஜினியர் வெட்டிக்கொலை

காரைக்குடி: காரைக்குடியில் சிவில் இன்ஜினியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடியைச் சேர்ந்தவர் பழனியப்பன் 34. சிவில் இன்ஜினியர். சாக்கோட்டை ஒன்றிய பா.ஜ., முன்னாள் செயற்குழு உறுப்பினர். இவருக்கு சொந்தமான கடைகள் அரியக்குடியில் உள்ளன. நேற்று மதியம், காரைக்குடி பொன்நகர் அருகே புதிதாக கட்டி வரும் கட்டடத்தை பார்வையிட்ட பழனியப்பனை, 3 பேர் ஆயுதங்களால் வெட்டினர். பழனியப்பன் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அழகப்பபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை