இளையான்குடிக்கு செயல் அலுவலர்
இளையான்குடி : தினமலர் செய்தி எதிரொலியாக இளையான்குடி பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இளையான்குடி பேரூராட்சியில் கடந்த ஒரு ஆண்டாக செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது.சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் கூடுதல் பொறுப்பாக இளையான்குடி பேரூராட்சியையும் கவனித்து வந்தார்.இங்கு நிரந்தரமாக செயல் அலுவலர் இல்லாததால், வளர்ச்சி திட்ட பணிகள், பிளான் அப்ரூவல், பெயர் மாற்றம் உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.இது குறித்து தினமலரில் செய்தி வெளியானதின்எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் பேரூராட்சி செயலர் அலுவலர் அன்னலட்சுமி, இளையான்குடிக்கு நியமிக்கப்பட்டார்.