உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எதிர்பார்ப்பு: பெர்மிட் இல்லாமல் இயங்கும் டூரிஸ்ட் வாகனங்கள்: போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா

எதிர்பார்ப்பு: பெர்மிட் இல்லாமல் இயங்கும் டூரிஸ்ட் வாகனங்கள்: போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, காரைக்குடி தேவகோட்டை, திருப்புத்துார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொந்தமாக கார், வேன், ஆட்டோ வைத்திருக்கும் பெரும்பாலானோர் தங்களது வாகனங்களில் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றுவது, மற்ற சுற்றுலா தலங்கள், கோயில்கள் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு சட்டவிரோதமாகசவாரிக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களில் சிலர் முறையாக டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை முறையாக பின்பற்றாமல் சவாரிக்கு செல்வதால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு உரிய இழப்பீடு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் டூரிஸ்ட் கார், வேன் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகி முனீஸ் கூறியதாவது:டூரிஸ்ட் கார், வேன் வைத்திருக்கும் எங்களை போன்றவர்கள் கடன் வாங்கி முதலீடு செய்து வாகனங்களை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். சமீப காலமாக கார் மற்றும் வேன் ஆகியவற்றை ஏராளமானோர் சொந்தமாக வாங்கி பயன்படுத்த துவங்கி உள்ளனர். இவர்கள் தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்துவதை விட அதனை வாடகைக்கு லாப நோக்கத்தோடு தங்களுக்குத் தெரிந்தவர்களை சவாரி ஏற்றிக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.மேலும் சிறிய ரக வேன் வைத்திருப்பவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றுக்கொண்டு பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் பணியை செய்து வருகிற நிலையில் முறையாக தொழில் கற்காத இவர்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பள்ளி குழந்தைகள் பலியாகி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தினரும் இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருவதோடு அவர்களும் பள்ளிக்கு இதுபோன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.சில வருடங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தங்களது சொந்த வாகனங்களை முறையாக டிரைவிங் பயின்ற டிரைவர்களை கொண்டு இயக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டும் தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படாததால் மீண்டும்விபத்து ஏற்பட்டு வருகிறது.வாடகை கார்,வேன் வைத்திருப்பவர்கள் 2012ம் ஆண்டுக்கு முன்பு வாகனம் வாங்கியவர்கள்3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.4 ஆயிரத்திற்கும் மேல் சாலைவரி கட்ட வேண்டிய நிலை உள்ளது. அதற்கு பிறகு வாங்கிய வாகனங்களுக்கு 15 வருடங்களுக்கும் சேர்த்து சாலை வரி கட்ட வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சொந்தமாக கார், வேன் போன்ற வாகனங்கள் வாங்குபவர்களுக்கு இந்த வரி கிடையாது. இதனை கண்காணிக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டும்காணாமல்இருந்து வருவதால் விபத்துக்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே அரசு இது அவ்வப்போது சோதனை நடத்தி சொந்தமாக கார், வேன் வைத்திருப்பவர்கள் லாபம் நோக்கத்தோடு சவாரி செல்லும்போது அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ