வெடி பாதுகாப்பு பயிற்சி
தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையினரால் மாணவர்களுக்கு பருவமழை பாதுகாப்பு, வெடி பாதுகாப்பாக வெடிப்பது பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் சேவியர்ராஜ் தலைமை வகித்தார்.தேவகோட்டை தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பருவ மழை காலங்களில் மீட்பு நடவடிக்கை பற்றியும், தீபாவளி நேரத்தில் வெடிகளை பாதுகாப்பாக வெடிப்பது பற்றி பயிற்சியும், மாணவர்களுடன் சேர்ந்து ஒத்திகை செய்து காண்பித்தனர்.மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் ஆரோக்கியராஜ் தொகுத்து வழங்கினார்.