உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  எம்.கரிசல்குளத்தில் கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் தவிப்பு

 எம்.கரிசல்குளத்தில் கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் தவிப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே எம்.கரிசல்குளத்தில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். இங்கு 200 ஏக்கரில் நெல் நடவு செய்துள்ளனர். இப்பகுதி கண்மாயில் சேகரமான தண்ணீரை வைத்து நடவு செய்தனர். தற்போது நெற்பயிர்கள் பால்பிடித்து, நெல் விளைய தொடங்கிய நிலையில், கண்மாயில் போதிய தண்ணீரின்றி விவசாயிகள் அருகில் உள்ள கால்வாய், குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து வந்து, பாய்ச்சுகின்றனர். இது குறித்து விவசாயி ஞானசேகர் கூறியதாவது, கண்மாய்களில் நீரின்றி நடவு செய்த நெற்பயிர்களை காப்பாற்ற மோட்டார் மூலம் பிற பகுதியில் இருந்து எடுத்து வருகிறோம். ஆனால், மிக அருகில் உள்ள மேல, கீழப்பசலை, வன்னிக்குடி கண்மாய்களுக்கு வைகை ஆறு மூலம் தண்ணீர் விடப்பட்டன. அதேநேரம் எம்.கரிசல்குளம் கண்மாயில் தண்ணீரின்றி தவிக்கிறோம். வைகை ஆற்றில் இருந்து எம்.கரிசல்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிட்டால், நடவு செய்த பயிர்களை விளைவித்து அறுவடை செய்வோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி