நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல் மானாமதுரை தாலுகாவில் முளைத்த நெல் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
சிவகங்கை: மானாமதுரையில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் 7 நாட்களாக விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யாமல் விட்டதால், மழைக்கு முளைத்து விடும் அச்சத்தில் விவ சாயிகள் நேற்று கலெக்டர் பொற்கொடியிடம் புகார் மனு அளித்தனர். சிவகங்கை மாவட் டத்தில் கோடை காலத்தில் பயிரிட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 13 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைத்தனர். ஜூன் 12 முதல் ஆக.,இறுதி வரை நெல்லை விவசாயி களிடம் வாங்கினர். கோடையில் 1882 விவசாயிகளிடம் 7162 டன் நெல்லை கொள்முதல் செய்து, அதற்கான தொகை ரூ.17.48 கோடியை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர். மானாமதுரை அருகே பீசர்பட்டினம், கொம்புக்காரனேந்தல், குவளை வேலி ஆகிய 3 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைத்திருந்தனர். ஆக., முடிந்த பின் விவ சாயிகளிடம் நெல்லை வாங்காமல் நிறுத்தி விட்டனர். இதனால் 11,000 (41 கிலோ மூடை) மூடைகள் தேங்கி கிடந்தன. தற்போது பெய்த மழைக்கு நெல் மூடைகள் அனைத்தும் முளைத்துவிடும் அச்சம் விவசாயி களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று கலெக்டர் பொற்கொடியிடம் குவளைவேலி விவசாயிகள் புகார் அளித்தனர். இன்று முதல் 3 மையம் செயல்படும் சிவகங்கை நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நத்தர்ஷா கூறியதாவது: ஜூன் முதல் ஆக., வரை 2024-2025ம் ஆண்டிற்கான கணக்கில் நெல்லை கொள்முதல் செய்தோம். அரசு நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி யுள்ளது. இதற்கான விலையை ஆன்லைனில் ஏற்றுவதற்காக பீசர் பட்டினம், குவளைவேலி, கொம்புக்காரனேந்தல் ஆகிய 3 மையங்களில் மூடைகளை பாதுகாப்பாக வைத்திருந்தோம். இன்று முதல் இம்மூன்று மையங்களில் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளபடி, வாங்கப்படும். அதன்படி சன்னரகம் குவிண்டால் (100 கிலோ) ரூ.2545, பொது ரகம் ரூ.2500 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும், என்றார்.