உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கல்லல் ஒன்றியத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு கண்மாய் நீர் ஆதாரமாக விளங்கும் மணிமுத்தாறு ஏரியூரில் தொடங்கி கல்லல் வழியாக எழுவன்கோட்டை, அனுமந்தகுடி சென்று தொண்டி வழியாக கடலில் கலக்கிறது.70 கி.மீ., துாரமுள்ள இந்த ஆற்றில் ஏராளமான தடுப்பணைகளும் 3க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகளும் உள்ளன. இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் மணிமுத்தாறு, முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கிறது.கருவேல மரங்களை அகற்ற அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் கூறுகையில்:ஏரியூர் ஏரிக்கண்மாயில் மணிமுத்தாறு தொடங்குகிறது. வேடசந்துார் அணைக்கட்டில் இருந்து வரும் பாலாறும் மணிமுத்தாறில் கலக்கிறது.செவரக்கோட்டையில் உள்ள அணைக்கட்டில் விருச்சுழி ஆறும் மணிமுத்தாறுடன் இணைகிறது. பட்டமங்கலத்தில் இருந்து வரக்கூடிய திருமணிமுத்தாறும் இதில் தான் கலக்கிறது. கள்ளிப்பட்டு, கண்டாரமாணிக்கம், கீழக்கோட்டை, செம்பனூர், செவரக்கோட்டை, பொய்யலூர் வேப்பங்குளம் அனுமந்தகுடி, உட்பட பல்வேறு பகுதிகளின் விவசாய நீர் ஆதாரமாக இந்த ஆறு விளங்குகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மணிமுத்தாறு கருவேல மரங்கள் சூழ்ந்து கிடக்கிறது. தவிர தடுப்பணைகள் அணைக்கட்டுகள் பராமரிப்பின்றி கிடக்கிறது. கருவேல மரங்களை அகற்றி அணைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்லல், ஏப். 27 -கல்லலில் விவசாயத்திற்கு நீர் ஆதாரமான மணிமுத்தாறில் கருவேல மரங்கள் வளர்ந்து கிடப்பதோடு தடுப்பணை, அணைக்கட்டு பராமரிப்பின்றி கிடப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை