உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் கண்மாய் கரைகளை பலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

மானாமதுரையில் கண்மாய் கரைகளை பலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார கிராம பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கண்மாய் மற்றும் நீர் நிலைகளின் கரைகளை பலப்படுத்த விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மானாமதுரை அருகே செய்களத்துார் கிராமத்தில் உள்ள கண்மாய் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கிருந்து 27 கிராமங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கண்மாயை நம்பி ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெய்த மழையை தொடர்ந்து இக்கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.மேலும் ரோடுகளையும் தண்ணீர் மூழ்கடித்து சென்றதால் மக்கள் இந்த ஊரை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த மதுசூதன்ரெட்டி கண்மாயை பார்வையிட்டு மடைகளையும், கரைகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு தற்போது வேலை நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் இன்னும் கரைகளை முறையாக பலப்படுத்தாமல் அரைகுறையாக வேலை நடந்து வருவதால் இப்போது சின்ன மழை பெய்தாலே கரை பாதிப்புக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ