உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஸ்பிரேயர்களுக்கு தட்டுப்பாடு தவிக்கும் விவசாயிகள்

ஸ்பிரேயர்களுக்கு தட்டுப்பாடு தவிக்கும் விவசாயிகள்

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஸ்பிரேயர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையை நம்பி திருப்புவனம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. செப்டம்பரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு தாமதமாக தொடங்கியதால் தற்போது தான் விவசாயிகள் நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை பறித்து நடவு செய்து வருகின்றனர்.நெல் வயல்களில் நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளிப்பது வழக்கம். இதற்காக கை ஸ்பிரேயர், மோட்டார் ஸ்பிரேயர் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் துறை மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு மான்ய விலையில் ஸ்பிரேயர் வழங்கப்படும். சமீப காலமாக பேட்டரி ஸ்பிரேயர் விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. பேட்டரி ஸ்பிரேயர்கள் தனியார் உர கடைகளில் மூவாயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மான்ய விலையில் இரண்டாயிரத்து 800 ரூபாய் என வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் நடந்து வரும் நிலையில் ஸ்பிரேயர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதுவரை வேளாண் துறை மூலம் மான்ய விலையில் ஸ்பிரேயர்கள் வழங்கப்படவில்லை. பெரிய விவசாயிகள் சொந்தமாக ஸ்பிரேயர் வாங்கி வைத்து பயன்படுத்துவார்கள், சிறு, குறு விவசாயிகள் பெரும்பாலும் வாடகைக்கு எடுத்து தான் பயன்படுத்துவார்கள், இவர்களுக்காக திருப்புவனத்தில் பேட்டரி ஸ்பிரேயர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஆனால் போதிய ஸ்பிரேயர்கள் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே தேவை அதிகம் உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு ஸ்பிரேயர்கள் மான்ய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேட்டரி ஸ்பிரேயர் எடை குறைவாகவும், கையாள எளிதாகவும் இருக்கும். பேட்டரி காலியானாலும் கையினாலும் இயக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ