மேலும் செய்திகள்
வயல்களில் கருவேல மரங்கள் அகற்ற முடியாமல் கவலை
04-Sep-2025
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மாடுகள் தொல்லையால் விவசாயிகள் பலர் நெல் சாகுபடியில் இருந்து தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இத்தாலுகாவில் சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் கோயில் மாடுகளும், எஸ்.மாம்பட்டி பகுதியில் கட்டாமல் அவிழ்த்து விடப்படும் வீட்டு மாடுகளும் அதிகமாக திரிகின்றன. எஸ்.புதுார் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு உள்ளிட்ட பகுதியில் காட்டு மாடுகள் மலையிலிருந்து இறங்கி வந்து விடுகின்றன. விவசாய காலங்களில் இப்பகுதியில் மாடுகளால் கடுமையான பயிர் சேதம் ஏற்படுகிறது. விவசாயிகள் விளைவித்த பயிர்களை காப்பாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். சிலர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி எதுவும் செய்யாமல் நிலத்தை தரிசாக போட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் மாடுகளின் தொல்லை அதிகரிப்பால் தற்போது சிலர் நெல்லில் இருந்து தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இப்பகுதியில் நெல் சாகுபடி பரப்பு குறையும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சிங்கம்புணரி, எஸ்.புதூர், எஸ்.மாம்பட்டி பகுதிகளில் விவசாயத்துக்கு அச்சுறுத்தலாக திரியும் மாடுகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
04-Sep-2025