உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போராடி பயிரைக் காப்பாற்றிய விவசாயிகள்

போராடி பயிரைக் காப்பாற்றிய விவசாயிகள்

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் என்.புதுாரில் விவசாயிகள் கண்மாயிலிருந்து பம்ப் செட் மூலம் நீர் எடுத்து வயல்களுக்கு பாய்ச்சி போராடி பயிரைக் காப்பாற்றி, தற்போது அறுவடையை துவக்கியுள்ளனர்.என்.புதுாரில் 150 ஏக்கரில் ஆண்டுதோறும் நெல்சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் நாற்று நடவும், போதிய மழை இல்லாததால் அதிகமாக விதைப்பும் நடந்தது. அவ்வப்போது பெய்த மழையால் வளர்ந்த கதிர் பரியும் நிலையில் மழை பெய்யவில்லை. கண்மாயில் நீர் இருந்தாலும், மடை உடைந்து விட்டதால் தண்ணீரின்றி பயிர் கருகும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் விவசாயிகள் சேர்ந்து கண்மாயிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பயிர்களைக் காப்பாற்றினர். நேற்று சிலர் அறுவடையைத் துவக்கியுள்ளனர்.அழகர்சாமி கூறுகையில், தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க மோட்டார் மூலம் வயல்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது.மணிக்கு ரூ 250 வீதம் ஏக்கருக்கு ரூ. 5000 வரை விவசாயிகளுக்கு செலவானது. பலரும் மூன்று முறை இவ்வாறு தண்ணீர் பாய்ச்சி பயிரைக் காப்பாற்றினர்' என்றார்.விவசாயி நாகராஜ் கூறுகையில், செலவழித்து தண்ணீர் பாய்ச்சி பயிரைக் காப்பாற்றினோம். இருந்தாலும் பட்டம் தவறிய விதைப்பு, நோய், பூச்சி தாக்குதல், கடைசியாக மழை இல்லாதது என்று பயிர் மகசூல் பாதித்துள்ளது.வழக்கமாக ஏக்கருக்கு 30 மூடை விளையும் இடத்தில் தற்போது 50 சதவீத விளைச்சலே உள்ளது. நஷ்டமுமில்லை. லாபமுமில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ