உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்மாய்க்கு சேராமல் வீணாகும் மழைநீர்: விவசாயிகள் கவலை

கண்மாய்க்கு சேராமல் வீணாகும் மழைநீர்: விவசாயிகள் கவலை

எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் கண்மாய்க்கு சேராமல் வீணாவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இவ்வொன்றியத்தில் எஸ்.புதுார் ஒன்றிய அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் பெய்யும் மழைநீர் அப்பகுதியில் உள்ள வடிகால் மூலம் அறிவிச்சான் கண்மாய் செல்லும் வகையில் வடிகால் அமைந்துள்ளது. பிறகு அக்கண்மாய் மறுகால் பாய்ந்து பொட்டக்கண்மாய், புதுக்கண்மாய் செல்லும் வகையில் சங்கிலித் தொடர் அமைப்புகள் உள்ளது. இந்நிலையில் அறிவிச்சாங்கண்மாய்க்கு வரும் வரத்துக்கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும், மண்மூடியும் காணப்படுகிறது. இதனால் மழை நீர் கண்மாய்களுக்கு செல்லாமல் வீணாகி வருகிறது. உரிய மழைநீர் முழு அளவில் வராததால், ஆண்டுதோறும் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி கண்மாய்க்கு மழைநீர் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை