உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் தாழ்வான மின்கம்பியால் அச்சம்

திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் தாழ்வான மின்கம்பியால் அச்சம்

திருப்புவனம்: திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் தாழ்வாக தொங்கும் மின் கம்பி களால் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யூனியன் அலுவலகம் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. திருப்புவனம் யூனியனுக்குட்பட்ட 173 கிராம மக்கள் தங்களது தேவைகளுக்காக தினசரி யூனியன் அலுவலகம் வந்து செல்கின்றனர். திருப்புவனம் யூனி யனுக்குட்பட்ட கிராமங்களில் பள்ளி, சத்துணவு கூடம், சமுதாய கூடம், வடிகால்கள் உள்ளிட்ட கட்டட பணிகளுக்கு தேவையான சிமென்ட், இரும்பு கம்பிகள், ஜல்லி கள் உள்ளிட்டவைகள் யூனியன் அலுவலக வளாகத்தில் இருந்துதான் தேவைக்கு ஏற்ப எடுத்து செல்லப்படுகிறது. பொருட்களை இறக்கவும், ஏற்றவும் லாரிகள், சரக்கு வேன்கள், ஆட்டோக்கள் உள் ளிட்டவைகள் தினசரி வந்து செல்கின்றன. மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் மிகுந்த அச்சத்துடனேயே சரக்கு வாகனங்கள் வந்து செல்ல வேண்டியுள்ளது. தற்போது காற்று வீசும் காலம் என்பதால் காற்று வீசும் போது சரக்கு வாகனங்களின் மீது மின் கம்பிகள் உரசி தீப்பொறி பறக்கின்றன. இதனால் விபரீதம் ஏற்பட வாய்ப்புண்டு, மேலும் யூனியன் அலுவலக சுவற்றை ஒட்டி அரசு பெண்கள் பள்ளியும் இரண்டாயிரம் மாணவி களுடன் செயல்பட்டு வருகிறது. அவசர காலங்களில் மாணவியர்கள் பலரும் யூனியன் அலுவலகம் வழியாகத்தான் வெளியேறுகின்றனர். தாழ்வாக தொங்கும் மின்கம்பி களால் அவர்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே மின்வாரியம் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை