உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் தொடரும் வழிப்பறியால் அச்சம்

சிவகங்கையில் தொடரும் வழிப்பறியால் அச்சம்

சிவகங்கை மாவட் டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. காரைக்குடியில் ஆக.4 இரவு மதுரை நகைக்கடை ஊழியர் விஜயராஜாவிடம் 1.5 கிலோ தங்கம் வழிப்பறி செய்யப்பட்டது. ஆகஸ்ட் 6 மதகுபட்டி அருகே பிரவலுாரில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது. ஆகஸ்ட் 8 சோழபுரம் அருகே டூவீலரில் சென்ற மூவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்தது. அன்று இரவே பெருமாள்பட்டியில் பிரவலுாரைச் சேர்ந்த வெங்கட்ராமனின் காரை வழிமறித்து ரூ.1 லட்சம் மற்றும் போனை ஒரு கும்பல் பறித்தது. ஆக.9ஆம் தேதி இரவு இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து ரூ.ஒரு லட்சம் திருடப்பட்டது. அன்றே காரைக்குடி டி.டி.நகர் 2 வது வீதியில் சென்ற மூதாட்டி வள்ளியம்மையின் 8 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது. ஆக.13 காளையார்கோவில் அருகே பகுதி நேர ஆசிரியர் ரமேஷ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி நகை பணம் வழிப்பறி செய்தனர். ஆக.16 மானாகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியுள்ளனர். அன்றே மதகுபட்டி அருகே சிலந்தகுடியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை வெள்ளி பொருட்களை திருடியுள்ளனர். ஆக.17 கோவானுாரில் தாய் மற்றும் மகளிடம் கத்தியை காட்டி 10 பவுன் மதிப்பிலான தங்க செயின்களை வழிப்பறி செய்தனர். நேற்று முன்தினம் மதகுபட்டி அருகே இளைஞரிடம் தங்க செயினை வழிப்பறி செய்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த 23 நாளில் தொடர் வழிப்பறி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட போலீசார் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ