இளையான்குடியில் காய்ச்சல் பாதிப்பு
இளையான்குடி: இளையான்குடி உட்பட கிராம பகுதிகளில் மக்களுக்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இளையான்குடி அருகே கீழநெட்டூர், வேலடிமடை,கோச்சடை, தெ.புதுக்கோட்டை, மேலநெட்டூர், முனைவென்றி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அவ்வப்போது வெயிலும் அடித்து வருவதால், காலநிலை மாற்றம் நிகழ்கிறது.இதனால், இப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய் பாதிப்பு அதிகரித்துள்ளன. மழை நீர் தேங்கி நிற்பதால், அதில் உருவாகும் கொசுக்கள் மூலம் நோய்கள் பரவுகிறது. இதனால், சிகிச்சைக்காக தாயமங்கலம், முனைவேன்றி, இளையான்குடி மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.