கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கயிறு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்தன.மணப்பட்டி அருகே காரைக்குடி ரோட்டில் சேவுகன் என்பவருக்கு சொந்தமான கயிறு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது.இங்கு நேற்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. சிங்கம்புணரி, திருப்புத்தூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடின. ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்விபத்தில் தொழிற்சாலை கட்டடம், இயந்திரங்கள், மூலப்பொருட்கள், ஏற்றுமதிக்காக வைத்திருந்த கயர் பித், குரோ பேக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.