மேலும் செய்திகள்
உலக அஞ்சல் தினம் கடிதம் எழுதிய மாணவர்கள்
10-Oct-2024
திருப்புவனம்:திருப்புவனம் தபால் அலுவலகத்தில் நேற்று காலை ஜெனரேட்டரில் தீ பிடித்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று காலை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மாடியில் செயல்படும் தபால் அலுவலக ஊழியர்கள் ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர். அப்போது திடீரென ஜெனரேட்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. ஊழியர்கள் தபால்கள், பார்சல்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி விட்டு ஈர சாக்கு வைத்து தீயை அணைக்க முயன்றனர்.பெட்ரோல் நிரப்பி இருந்ததால் தீ மளமளவென பிடித்தது. அருகில் இருந்த பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனர். தாசில்தார் விஜயகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறியது: ஜெனரேட்டரில் பெட்ரோலுடன் ஆயிலும் கலந்திருக்கும். அதை ஈர துணியை வைத்துதான் அணைக்க முடியும், ஈர சாக்கு வைத்து அணைக்க முயற்சித்துள்ளனர். பெட்ரோல் முழுவதும் எரிந்த உடன் தீ கட்டுக்குள் வந்துள்ளது,என்றனர். தீ விபத்தில் ஜெனரேட்டர் மட்டுமே எரிந்தது. பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை. ஊழியர்களும் வெளியேறி விட்டனர்.
10-Oct-2024