காரைக்குடியில் மஹாலில் தீ விபத்து
காரைக்குடி: காரைக்குடி நா. புதுாரில் உள்ள மானகிரி பழனியப்ப செட்டியார் வீதியில் செந்தில்குமார் 57 என்பவருக்கு சொந்தமான மஹால் உள்ளது. நேற்று, மதியம் மஹாலில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மஹால் உரிமையாளருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.அதிக வீடுகள் நிறைந்த, குறுகிய சாலை என்பதால் தீயணைப்பு வண்டி வருவதில் சிக்கல் நிலவியது. ஓட்டுக்கட்டடத்தில் இயங்கிய மஹாலின் நடுப்பகுதி மற்றும் பின்பகுதி முற்றிலும் எரிந்தது.தேவகோட்டை மற்றும் காரைக்குடி தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் பல மணி நேரம் ஈடுபட்டனர். மஹாலில் இருந்த தேக்கு மர பொருட்கள், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தும் பொருட்கள் முற்றிலும் எரிந்தது. காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.