உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை சந்தையில் மீன்கள் பறிமுதல்

சிவகங்கை சந்தையில் மீன்கள் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தையில் கெட்டுபோன மீன்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து விற்பனையாளருக்கு அபராதம் விதித்தனர்.சிவகங்கையில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை கூடும். சந்தையில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தலைமையில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சண்முகம், மீன்வள ஆய்வாளர் சதீஸ்குமார் ஆய்வு செய்தனர். இதில் 3 கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதை அறிந்து அவர்களிடம் இருந்து 30 கிலோ மீன்களை பறிமுதல் செய்ததோடு கடைக்கு ரூ.2,000 வீதம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை