உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெற்குப்பையில் நாட்டுப்புற கலைவிழா

நெற்குப்பையில் நாட்டுப்புற கலைவிழா

நெற்குப்பை : நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நுாலகத்தில் சோமலெவின் “தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்” என்ற நுாலை மையமாக வைத்து நாட்டுப்புற கலை விழா நடந்தது.நூலகர் மீ. அகிலா வரவேற்றார். அரு.லெட்சுமணன் தலைமையுரையாற்றினார். காரைக்குடி ராமசாமிக் கல்லூரி முதல்வர் செ.நாகநாதன் கிராமப்புற மாணவர்கள் நாட்டுப்புற கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசினார். வாசகர்களுக்கு மீனாள் பழனியப்பன், தேவி நாச்சியப்பன் பரிசுகள் வழங்கினார்.நாட்டுப்புற கலைகள் பற்றி பேசியவர்கள், கலை நிகழ்ச்சி வழங்கிய மாணவர்களை சோமலெ சோமசுந்தரம் வாழ்த்தினார். ச.பிரபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ