கால்பந்து போட்டி
காரைக்குடி; இளையான்குடி கல்லுாரியில் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடந்தது. இதில் 15 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் புதுவயல் வித்யாகிரி கல்லூரி அணியினர் இறுதிப் போட்டியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியை வென்று முதலிடம் பிடித்தனர். தாளாளர் சுவாமிநாதன், கல்லுாரி தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமது மீரா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.