மேலும் செய்திகள்
மழை இல்லாமல் வாடும் வாழை வேதனையில் விவசாயிகள்
13-Sep-2024
இளையான்குடி: இளையான்குடி அருகே விரையாதகண்டன் --துகவூர் இடையே நடந்து கூட செல்ல முடியாத ரோடால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.இளையான்குடி அருகே உள்ள விரையாதகண்டனிலிருந்து துகவூர் செல்லும் ரோடு கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் தற்போது எங்கு பார்த்தாலும் கற்கள் பெயர்ந்து மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் கூட இந்த ரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் கூட வர மறுப்பதால் சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.கிராம மக்கள் கூறியதாவது: விரையாதகண்டன், கல்லணி, கலங்காதன்கோட்டை, துகவூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் சூராணம் செல்வதற்கு இந்த ரோட்டை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது எங்கு பார்த்தாலும் ரோடு மோசமான நிலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது.ரோட்டை மறைக்கும் அளவிற்கு கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுவதாலும் கிராம மக்கள் 6 கி.மீ., சுற்றி சூராணம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த ரோட்டின் வழியாக தங்களது நிலங்களுக்கு தேவையான இடு பொருட்கள் மற்றும் உரம் கொண்டு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
13-Sep-2024