மேலும் செய்திகள்
தி.மு.க., வக்கீல் பிரிவு நிர்வாகிகள் நியமனம்
08-Jul-2025
திருப்புத்துார்; திருப்புத்துார் அண்ணாதுரை சிலை அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை தி.மு.க.,வினர் அனுசரித்தனர். காந்தி சிலையிலிருந்து தி.மு.க., மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக மதுரை ரோடு வழியாக அண்ணாதுரை சிலைக்கு வ்ந்தனர். அங்கு கருணாநிதி படத்திற்கு அமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி, பேரூராட்சி துணைத் தலைவர் கான் முகமது, பேரூராட்சி முன்னாள் தலைவர் சாக்ளா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வல்லபாய், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் காளிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
08-Jul-2025