காரைக்குடியில் ரூ.8 லட்சம் மோசடி அறக்கட்டளை நிறுவனர் கைது
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாற்றம் பவுண்டேஷன் நிறுவன தலைவர் அலெக்சாண்டர் 46,க்கு வழங்கிய ரூ.8 லட்சத்தை தராமல் ஏமாற்றியதாக, பெண் புகாரின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். - தேவகோட்டை ராம்நகர் சூசைமாணிக்கம் மகன் அலெக்சாண்டர். இவர் காரைக்குடியில் மாற்றம் பவுண்டேஷன் நடத்துகிறார். இவர் கல்லுாரியில் சேர்த்துவிடுவதாக கூறி மாணவ, மாணவிகளின் ஒரிஜினல் சான்றுகளை பெற்று, திரும்ப தராமல் பணம் கேட்டு மோசடி செய்து வருவதாக புகார் எழுந்து வந்தது. இவரது நிறுவனத்தில் சாலைக்கிராமம் சிவகாமி 47, வேலை செய்தார். அலெக்சாண்டருக்கு ரூ.8 லட்சம் கொடுத்திருந்தார். அதை திரும்ப கேட்டபோது கொடுக்க மறுத்து, கேட்க கூடாது என மிரட்டியுள்ளார். சிவகாமி புகாரில் போலீசார் அலெக்சாண்டரை கைது செய்தனர்.