இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.11.19 லட்சம் மோசடி
சிவகங்கை : இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி, தச்சு தொழிலாளியிடம், 11.19 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்புத்துாரை சேர்ந்தவர் ரவி, 37; தச்சு தொழிலாளி. இவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், 'வீட்டில் இருந்தே ஆன்லைனில் முதலீடு செய்து, இரட்டிப்பு லாபம் பெறலாம்' என, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய ரவி, நான்கு வங்கி கணக்குகளில், நான்கு முறையாக, 11.19 லட்சம் ரூபாய் அனுப்பினார். ஆனால், இதற்கான லாப தொகையை கேட்டவரிடம், மேலும், முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். சந்தேகமடைந்த ரவி, சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., முருகானந்தம் விசாரிக்கிறார்.