மேலும் செய்திகள்
இலவச தொழில் பயிற்சி சேர்க்கை துவக்கம்
25-Nov-2024
சிவகங்கை : சிவகங்கையில் மகளிருக்கு இலவச அழகுக்கலை, திறன் மேம்பாட்டு பயிற்சி டிச.,9 முதல் 24 வரை தரப்படும் என சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன உதவி இயக்குனர் சந்திரிகா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தை சேர்ந்த வயது 18 முதல் 45 க்கு உட்பட்ட பெண்களுக்கு இலவசமாக அழகு கலை, திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன (எம்.எஸ்.எம்.இ.,) மூலம் நடத்தப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். சிகை அலங்காரம், மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர், முடி, கால், கை ஸ்பா மற்றும் முடி சிகிச்சைகள், பியூட்டி பார்லர் தொடங்கி நடத்துவது குறித்த தலைப்பில் திறன் பயிற்சிகளும் வழங்கப்படும்.தொழில் தெரிவு, சந்தைப்படுத்துதல், எம்.எஸ்.எம்.இ., சான்று பெற பதிதல், வணிக மேலாண்மை, திட்ட அறிக்கை தயாரித்தல், தொழில் தொடங்க மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தரப்படும். தொழில் தொடங்க முன்வரும் பெண்கள், பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். சிவகங்கை மதுரை முக்கு அருகே ஏ.சி., காம்ப்ளக்சில் உள்ள என்.ஐ.எஸ்.எம்., பயிற்சி மையத்தில் டிச., 9 முதல் 24 வரை தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்று வழங்கப்படும். பயிற்சியில் பங்கு பெற அலைபேசி எண் 98420 35441-க்கு வாட்ஸ் ஆப்' மூலம் பதிவு செய்ய வேண்டும், என்றார்.
25-Nov-2024