மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து செய்யூரில் 3 பசுக்கள் பலி
07-Aug-2025
சிவகங்கை: மாவட்டத்தில் 1 லட்சம் பசு மாடுகளுக்கு தோல் கழலை நோயை தடுக்க இலவச தடுப்பூசி செப்டம்பர் முழுவதும் போடப்படும் என சிவகங்கை கால்நடை துறை இணை இயக்குனர் நந்தகோபால் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் வளர்க்கப்படும் பால் மாடுகளுக்கு தோல் கழலை நோய் வராமல் தடுக்கும் விதமாக, இலவசமாக தடுப்பூசி முகாம் அமைத்து, பசுக்களுக்கு வழங்கப்பட உள்ளது. 4 வயது கன்றுக்குட்டி முதல் பசு மாடுகள் வரை அனைத்து (சினை பசுக்கள் தவிர்த்து) பசுக்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும். இதற்காக மாவட்ட அளவில் 57 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைத்துள்ளோம். ஒரு குழுவில் கால்நடை டாக்டர், ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இடம் பெறுவர். ஒவ்வொரு குழுவிற்கும் 100 பசுக்கள் வீதம் நிர்ணயம் செய்து, இலவசமாக தடுப்பூசி போடப்படும். கால்நடை வளர்ப்போர் கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு தங்கள் பசுக்களை அழைத்து சென்று, இலவசமாக தடுப்பூசி செலுத்தி, பாதுகாத்து கொள்ள வேண்டும், என்றார்.
07-Aug-2025